மானிப்பாய் ஸ்ரீ ஆனந்தன் வைரவர் ஆலயம்.
Manipay Sri Ananthan Vairavar Aalayam.
ஸ்ரீ வைரவர் வழிபாடு.Sri Vairavar Valipadu.
அனைத்து ஆனந்தன் வைரவர் அடியவர்களுக்கும் தெரியப்படுத்துகிறேன் மானிப்பாய் ஸ்ரீ ஆனந்தன் வைரவர் ஆலயத்தின் முழுபதிப்பு உரிமையும் கொண்ட ஒரே ஒரு இணையதளம் www.sriananthanvairavar.blogspot.com. மட்டும்
இவ் இணையத்தளத்தை பார்ப்பதோடு உங்கள் உறவுகளுக்கும் தெரியப்படுத்துங்கள்

மேலும் பதிவுகள் தொடர்ந்து வரவுள்ளது...........
Showing posts with label 005 அசுரர்களை அழிக்க வைரவர் தோன்றல். Show all posts
Showing posts with label 005 அசுரர்களை அழிக்க வைரவர் தோன்றல். Show all posts

அசுரர்களை அழிக்க வைரவர் தோன்றல்

     ஒரு சமயம் அந்தகாசுரன் என்னும் அரக்கனின் அட்டூழியங்களை ஒழிக்க தேவர்கள் சிவனாரை வேண்ட ஈசன் தன் இதய அக்கினியிலிருந்து வைரவரை உருவாக்க அது விஸ்வரூபமெடுத்து ஒன்றாகி, ஒன்றிலிருந்து எட்டாகி,எட்டிலிருந்து அறுபத்து நான்காகி அசுரர்களை முழுவதுமாக அழித்து தேவர்களுக்கு அமைதியை வழங்கியதாகவும் இதனால் மகிழ்வடைந்து தேவர்கள் அறுபத்துநான்கு யோகினிகளை அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.ஆனால் தற்சமயம் தம்முடைய வழிபடும் முறை இருந்து வருகிறது. ஆக அஷ்ட வைரவர்கள் மற்றும் அஷ்ட வைரவ யோகினிகள் யார், யார் என்பதைக் காண்போம். 
1 . அசிதாங்க வைரவர் - பிராம்ஹி, 
2 . குரு வைரவர் - மாகேஸ்வரி,
3 . சண்ட வைரவர் - கவுமாரி,
4 . குரோதான வைரவர் - வைஷ்ணவி,
5 . உன்மத்த வைரவர் - வாரஹி,
6 . கபால வைரவர் - இந்திராணி,
7 . பீஷண வைரவர் - சாமுண்டி,
8 . சம்ஹார வைரவர் - சண்டிகா தேவி
ஆகியோர் ஆவர்.

உங்கள் கருத்து.....