சவுந்தர்யலஹரியில் 41வது சுலோகத்தில் காலாக்னிருத்திரனால் மகாபிரளயத்தில் சாம்பலாக்கப்பட்ட உலகத்தை மீண்டும் உண்டு பண்ணுகின்ற காரணத்திற்காக சித்சக்தியான அம்பிகையே ஆனந்த வைரவியாகவும், ஈசனே ஆனந்த வைரவராகவும் தாண்டவமாடிக் கொண்டிருப்பதால் ஒன்பது விதமான ரகங்களும் வெளிவருகின்றது என்றும் உலக சிருஷ்டியே ஆனந்த வைரவரால்தான் நடப்பதாகவும் மகா காலசம்ஹிதை, காலீதந்திரம், விஞ்ஞானவைரவர் முதலிய சுலோகங்களில் சொல்லப்பட்டுள்ளது.
Manipay Sri Ananthan Vairavar Aalayam. |
|
மேலும் பதிவுகள் தொடர்ந்து வரவுள்ளது...........
வைரவரின் சிறப்பு
சிவபிரானின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றியவர் காசியம்பதியில் சிவகணங்களுக்கு தலைவராக விளங்குபவர். ஆணவம் கொண்ட பிரம்மனின் சிரம் கொய்தவர். மன்மதனின் கர்வம் அடங்கச்செய்தவர். முனிவரின் சாபத்திலிருந்து தேவேந்திரன் மகன் ஜெயந்தனைக்காத்தவர். சனியை சனீஸ்வரராக்கி நவக்கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமை சேர்த்தவர் என்ற பெருமைமிகு சிறப்புகளைக்கொண்டவர். இவரைக்காலவைரவர், மார்த்தாண்ட வைரவர், கேக்ஷத்ரபாலகர், சத்ருசம்ஹார வைரவர் என்று பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறோம்.
Subscribe to:
Posts (Atom)