மானிப்பாய் ஸ்ரீ ஆனந்தன் வைரவர் ஆலயம்.
Manipay Sri Ananthan Vairavar Aalayam.
ஸ்ரீ வைரவர் வழிபாடு.Sri Vairavar Valipadu.
அனைத்து ஆனந்தன் வைரவர் அடியவர்களுக்கும் தெரியப்படுத்துகிறேன் மானிப்பாய் ஸ்ரீ ஆனந்தன் வைரவர் ஆலயத்தின் முழுபதிப்பு உரிமையும் கொண்ட ஒரே ஒரு இணையதளம் www.sriananthanvairavar.blogspot.com. மட்டும்
இவ் இணையத்தளத்தை பார்ப்பதோடு உங்கள் உறவுகளுக்கும் தெரியப்படுத்துங்கள்

மேலும் பதிவுகள் தொடர்ந்து வரவுள்ளது...........

பைரவர்

        சிவரூபமான தட்சிணாமூர்த்தி கல்விக்கும், நடராஜமூர்த்தி நடனத்திற்கும், லிங்கமூர்த்தி அருவ வழிபாட்டிற்கும் வைரவமூர்த்தி காவலுக்கும் அதிபதியாக மக்களால் தொன்றுதொட்டு வணங்கபட்டு வருகிறார்கள்.

      சிவபெருமானின் ஐந்து குமாரர்களாக கணபதி,முருகன்,பைரவர், வீரபத்திரர்,சாஸ்தா என்றும் சொல்லப்படுகிறது. ஐவரில் மகாவைரவர் பொதுவாக எல்லா ஆலயங்களிலும் ஈசான்யமூலை எனப்படும் வடகிழக்கு திசையிலே நிர்வாணக்கோலத்தினறாய், நீலமேனியராய், நாய் வாகனத்துடன் காட்சி தருபவர்தான் பைரவப்பெருமான். காலையில் ஆலயம் திறந்தவுடன்,இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் வைரவருக்கு என்று விஷேசபூஜைகள் செய்யப்படவேண்டும் என்று பார்த்த நித்தியாபூஜா விதி கூறுகிறது. அதேபோல் ஆலயத்தின் மற்ற திருச்சன்னதிகளை பூட்டி சாவியை பைரவர் பாதத்தில் வைத்து விட்டு அதன்பின் வெளிக் கதவை பூட்டிச் சாவியை எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

உங்கள் கருத்து.....