சிவரூபமான தட்சிணாமூர்த்தி கல்விக்கும், நடராஜமூர்த்தி நடனத்திற்கும், லிங்கமூர்த்தி அருவ வழிபாட்டிற்கும் வைரவமூர்த்தி காவலுக்கும் அதிபதியாக மக்களால் தொன்றுதொட்டு வணங்கபட்டு வருகிறார்கள்.
சிவபெருமானின் ஐந்து குமாரர்களாக கணபதி,முருகன்,பைரவர், வீரபத்திரர்,சாஸ்தா என்றும் சொல்லப்படுகிறது. ஐவரில் மகாவைரவர் பொதுவாக எல்லா ஆலயங்களிலும் ஈசான்யமூலை எனப்படும் வடகிழக்கு திசையிலே நிர்வாணக்கோலத்தினறாய், நீலமேனியராய், நாய் வாகனத்துடன் காட்சி தருபவர்தான் பைரவப்பெருமான். காலையில் ஆலயம் திறந்தவுடன்,இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் வைரவருக்கு என்று விஷேசபூஜைகள் செய்யப்படவேண்டும் என்று பார்த்த நித்தியாபூஜா விதி கூறுகிறது. அதேபோல் ஆலயத்தின் மற்ற திருச்சன்னதிகளை பூட்டி சாவியை பைரவர் பாதத்தில் வைத்து விட்டு அதன்பின் வெளிக் கதவை பூட்டிச் சாவியை எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.