மானிப்பாய் ஸ்ரீ ஆனந்தன் வைரவர் ஆலயம்.
Manipay Sri Ananthan Vairavar Aalayam.
ஸ்ரீ வைரவர் வழிபாடு.Sri Vairavar Valipadu.
அனைத்து ஆனந்தன் வைரவர் அடியவர்களுக்கும் தெரியப்படுத்துகிறேன் மானிப்பாய் ஸ்ரீ ஆனந்தன் வைரவர் ஆலயத்தின் முழுபதிப்பு உரிமையும் கொண்ட ஒரே ஒரு இணையதளம் www.sriananthanvairavar.blogspot.com. மட்டும்
இவ் இணையத்தளத்தை பார்ப்பதோடு உங்கள் உறவுகளுக்கும் தெரியப்படுத்துங்கள்

மேலும் பதிவுகள் தொடர்ந்து வரவுள்ளது...........

ராசிகளின் ராஜா

     பிருஹத்ஜாதகம் என்ற நூலில் பனிரெண்டு ராசிகளும் வைரவருடைய உடலின் அங்கங்களாக இருப்பதாகவும் அவை 
1 . மேஷம் - சிரசு.
2 . ரிஷபம் - வாய்.
3 . மிதுனம் - இருகைகள்.
4 . கடகம் - மார்பு.
5 . சிம்மம் - வயிறு.
6 . கன்னி - இடை.
7 . துலாம் - புட்டங்கள்.
8 . விருச்சிகம் - மர்ம ஸ்தானங்கள்.
9 . தனுசு - தொடை.
10 . மகரம் - முழங்கால்கள்.
11 . கும்பம் - காலின் கீழ்பகுதி.
12 . மீனம் - கால்களின் அடிப்பாகம்.
என பனிரெண்டு ராசிகளும் நிறைந்துள்ளது.

    மேலும் வைரவரின் சேவகர்களாக நவக்கோளங்களும் இருப்பதால் தன்னை வணங்கக்கூடிய அன்பர் எந்த ராசியைச் சேர்ந்தவராயினும் நவக்கோல்களில் எந்தக்கோளின் தாக்கத்தால் பாதிப்பு வந்தாலும் கெடுதல்கள் அனைத்திலிருந்தும் விடுவிப்பார்.

அசுரர்களை அழிக்க வைரவர் தோன்றல்

     ஒரு சமயம் அந்தகாசுரன் என்னும் அரக்கனின் அட்டூழியங்களை ஒழிக்க தேவர்கள் சிவனாரை வேண்ட ஈசன் தன் இதய அக்கினியிலிருந்து வைரவரை உருவாக்க அது விஸ்வரூபமெடுத்து ஒன்றாகி, ஒன்றிலிருந்து எட்டாகி,எட்டிலிருந்து அறுபத்து நான்காகி அசுரர்களை முழுவதுமாக அழித்து தேவர்களுக்கு அமைதியை வழங்கியதாகவும் இதனால் மகிழ்வடைந்து தேவர்கள் அறுபத்துநான்கு யோகினிகளை அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.ஆனால் தற்சமயம் தம்முடைய வழிபடும் முறை இருந்து வருகிறது. ஆக அஷ்ட வைரவர்கள் மற்றும் அஷ்ட வைரவ யோகினிகள் யார், யார் என்பதைக் காண்போம். 
1 . அசிதாங்க வைரவர் - பிராம்ஹி, 
2 . குரு வைரவர் - மாகேஸ்வரி,
3 . சண்ட வைரவர் - கவுமாரி,
4 . குரோதான வைரவர் - வைஷ்ணவி,
5 . உன்மத்த வைரவர் - வாரஹி,
6 . கபால வைரவர் - இந்திராணி,
7 . பீஷண வைரவர் - சாமுண்டி,
8 . சம்ஹார வைரவர் - சண்டிகா தேவி
ஆகியோர் ஆவர்.

பிரம்மனின் செருக்கு அழித்தல்

     ஒரு காலத்தில் ஐந்து தலைகளுடன் விளங்கிய பிரம்மா தனக்கும் ஐந்து தலை, ஈசனுக்கும் ஐந்து தலை. ஆகவே தானே உயர்ந்தவன். தன்னைப்போற்ற வேண்டும், துதிக்க வேண்டும் என்று சித்த, ரிஷி, முனிவர்களை வற்புறுத்த தொடங்கவே அவர்கள் சிவனாரை தரிசித்து பிரம்மனின் ஆணவபோக்கை எடுத்துக் கூற வைரவபெருமனை அழைத்து பிரம்மாவின் ஐந்தாவது தலையை நிக்கி அவரை நான்முகன் ஆக்கினார். பிரம்மாவை நான்முகன் ஆக்கிய சிவசொரூபமே ஸ்ரீ வைரவர் என்று காசி காண்டம் சொல்கிறது.

உலக சிருஷ்டி

     சவுந்தர்யலஹரியில் 41வது சுலோகத்தில் காலாக்னிருத்திரனால் மகாபிரளயத்தில் சாம்பலாக்கப்பட்ட உலகத்தை மீண்டும் உண்டு பண்ணுகின்ற காரணத்திற்காக சித்சக்தியான அம்பிகையே ஆனந்த வைரவியாகவும், ஈசனே ஆனந்த வைரவராகவும் தாண்டவமாடிக் கொண்டிருப்பதால் ஒன்பது விதமான ரகங்களும் வெளிவருகின்றது என்றும் உலக சிருஷ்டியே ஆனந்த வைரவரால்தான் நடப்பதாகவும் மகா காலசம்ஹிதை, காலீதந்திரம், விஞ்ஞானவைரவர் முதலிய சுலோகங்களில் சொல்லப்பட்டுள்ளது. 

வைரவரின் சிறப்பு

          சிவபிரானின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றியவர் காசியம்பதியில் சிவகணங்களுக்கு தலைவராக விளங்குபவர். ஆணவம் கொண்ட பிரம்மனின் சிரம் கொய்தவர். மன்மதனின் கர்வம் அடங்கச்செய்தவர். முனிவரின் சாபத்திலிருந்து தேவேந்திரன் மகன் ஜெயந்தனைக்காத்தவர். சனியை சனீஸ்வரராக்கி நவக்கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமை சேர்த்தவர் என்ற பெருமைமிகு சிறப்புகளைக்கொண்டவர். இவரைக்காலவைரவர், மார்த்தாண்ட வைரவர்,  கேக்ஷத்ரபாலகர், சத்ருசம்ஹார வைரவர் என்று பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறோம்.

பைரவர்

        சிவரூபமான தட்சிணாமூர்த்தி கல்விக்கும், நடராஜமூர்த்தி நடனத்திற்கும், லிங்கமூர்த்தி அருவ வழிபாட்டிற்கும் வைரவமூர்த்தி காவலுக்கும் அதிபதியாக மக்களால் தொன்றுதொட்டு வணங்கபட்டு வருகிறார்கள்.

      சிவபெருமானின் ஐந்து குமாரர்களாக கணபதி,முருகன்,பைரவர், வீரபத்திரர்,சாஸ்தா என்றும் சொல்லப்படுகிறது. ஐவரில் மகாவைரவர் பொதுவாக எல்லா ஆலயங்களிலும் ஈசான்யமூலை எனப்படும் வடகிழக்கு திசையிலே நிர்வாணக்கோலத்தினறாய், நீலமேனியராய், நாய் வாகனத்துடன் காட்சி தருபவர்தான் பைரவப்பெருமான். காலையில் ஆலயம் திறந்தவுடன்,இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் வைரவருக்கு என்று விஷேசபூஜைகள் செய்யப்படவேண்டும் என்று பார்த்த நித்தியாபூஜா விதி கூறுகிறது. அதேபோல் ஆலயத்தின் மற்ற திருச்சன்னதிகளை பூட்டி சாவியை பைரவர் பாதத்தில் வைத்து விட்டு அதன்பின் வெளிக் கதவை பூட்டிச் சாவியை எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

உங்கள் கருத்து.....