தாட்சாயணி தேவி தன் தந்தை தட்சன் செய்த யாகத்தில் தனது மருமகனான சிவனாருக்கு யாகத்தில் தரவேண்டிய அவிர்பாகத்தை தராது அவமதித்ததால் தச்சனின் மகளான பார்வதிதேவி யாக குண்டத்தில் தனது உயிரைத்தியதாகம் செய்தபோது அதனால் உக்கிரநிலை அடைந்த சிவனார் தாட்சாயணியின் உடலைத்தாங்கி உலகமெல்லாம் சுற்றி அலைந்தபோது திருமால் தன் சக்கரத்தால் தேவியின் உடலை பல கூறுகளாக்கி இப்பூலோகத்தில் பல இடங்களில் விழச்செய்தார் என்றும் தேவியின் உடலுறுப்புக்கள் விழுந்த ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு சக்தி பீடங்களுக்குப் பாதுகாவலராக வைரவ வேடம் தாங்கி சிவப்பிரானே காவல் காத்து வருவதாகவும் புராணங்கள் கூறுகின்றன.