மானிப்பாய் ஸ்ரீ ஆனந்தன் வைரவர் ஆலயம்.
Manipay Sri Ananthan Vairavar Aalayam.
ஸ்ரீ வைரவர் வழிபாடு.Sri Vairavar Valipadu.
அனைத்து ஆனந்தன் வைரவர் அடியவர்களுக்கும் தெரியப்படுத்துகிறேன் மானிப்பாய் ஸ்ரீ ஆனந்தன் வைரவர் ஆலயத்தின் முழுபதிப்பு உரிமையும் கொண்ட ஒரே ஒரு இணையதளம் www.sriananthanvairavar.blogspot.com. மட்டும்
இவ் இணையத்தளத்தை பார்ப்பதோடு உங்கள் உறவுகளுக்கும் தெரியப்படுத்துங்கள்

மேலும் பதிவுகள் தொடர்ந்து வரவுள்ளது...........

சனீஸ்வரருக்கு அருளுதல்

    சூரிய பகவானின் புத்திரர்களாகிய எமதருமரும் சனியும் சகோதரர்களாவார்கள். இதிலே எமதருமர் நல்ல அழகுடனும், ஆரோக்கியத்துடனும் திகழ்ந்து, சனி ஊனமான காலுடன் சற்று அழகு குறைந்தும் காணப்பட்டதால் தனது சகோதரனால் அலட்சியப்படுத்தப்பட்டு வந்தார். இதனால் மனம் வருந்திய சனி தனது தாயான சாயாதேவியிடம் மனவருத்தத்தை எடுத்துக்கூற நீ இன்று முதல் வைரவரை உள்ளன்போடு வழிபட்டு வா. அவர் உனக்கு நல்ல நிலையைத்தருவார். உனது மனத்துயரம் யாவும் தீர்ந்து போகும் என்று தாயார் கூறிய அறிவுரையை ஏற்று சனியும் வைரவப்பெருமானை வழிபாடு செய்து வரலானார். சனியின் உண்மை அன்பால், கள்ளமில்லா வழிபாட்டால் மனம் மகிழ்ந்து வைரவர் சனியின் உண்மை அன்பை மக்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக ஈஸ்வரப்பட்டம் அளித்து சனீஸ்வரராக நவக்கோல்களில் சக்தி மிகுந்த கோளாக உயர்த்தி பெருமைப்படுத்தினார். ஆகவே வைரவமூர்த்தியை வழிபட 
1 . ஏழரைச்சனி.
2 . அஷ்டமச்சனி.
3 . கண்டச்சனி.
4 . ஜென்மச்சனி.
5 . அர்த்தாஷ்டமச்சனி
போன்ற சனி தோஷங்கள் பனி போல் விலகிடும்.

     வைரவப்பெருமானை வழிபட ஒவ்வொரு மாத அஷ்டமியும் மிகச் சிறந்த நாளே. ஏனெனில் அன்றைய நாளில் அஷ்டலட்சுமிகளும் வைரவரை வழிபடுவதாகவும் அதனால் அன்று அவரை வணங்கிட மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம். மேலும் ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமிக்கும் ஒவ்வொரு சிறப்புப்பெயர் உண்டு.

மார்கழி - சங்கராஷ்டமி.
தை - தேவதேவாஷ்டமி.
மாசி - மகேஸ்வரராஷ்டமி.
பங்குனி - திரியம்பகாஷ்டமி.
சித்திரை - ஸ்நாதனாஷ்டமி.
வைகாசி -சதாசிவாஷ்டமி.
ஆனி - பகவதாஷ்டமி.
ஆடி - நீலகண்டாஷ்டமி.
ஆவணி - ஸ்தழனு அஷ்டமி.
புரட்டாசி - சம்புகாஷ்டமி.
ஐப்பசி - ஈசானசிவாஷ்டமி.
கார்த்திகை - காலவைரவராஷ்டமி.

     மேலும் காலவைரவாஷ்டமி எமவாதனை நீக்கம் மகதேவாஷ்டமி ஆகும். வைரவருக்கு அர்த்தசாம பூஜை மிக விசேஷமானதாகும்.

உங்கள் கருத்து.....